பிரித்தானிய பொதுத் தேர்தல் (British general election) எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி நடத்தப்படவுள்ள நிலையில் பிரித்தானிய நாடாளுமன்றம் (British parliament) இன்று (30) கலைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி நடத்தப்படும் என அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak) அண்மையில் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து உரிய காலத்திற்கு முன்னதாகவே தேர்தலை நடத்தும் பிரித்தானிய பிரதமரின் தீர்மானத்திற்கு கன்சர்வேடிவ் கட்சியைச் (Conservative party)சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொழிலாளர் கட்சி வெற்றி
இந்த நிலையில் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் கடந்த 24ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி (Labour party) வெற்றி பெற்றது.
பொதுத் தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில், பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி தோல்வியடையும் என்று கூறப்படட்ட நிலையில் இன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து 5 வாரங்களின் பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.