யாழ்ப்பாணத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர், லண்டன் வாழ் மகளால் தாக்குதலுக்குள்ளான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த ஆசிரியைல்லு இரு பிள்ளகள் உள்ள நிலையில் தாயார் தனது மகனுக்கு தனது சொத்துக்களை எழுதி வைத்ததே தாக்குதலுக்கு காரணம் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தாக்குதலுக்குள்ளான ஆசிரியை
இறுதி யுத்தத்தில் முல்லைத்தீவில் கணவனை இழந்த ஆசிரியை மிகுந்த சிரமத்தின் மத்தியில் வளர்த்து வந்த நிலையில் மகள், தாயின் விருப்பம் இன்றி காதல் திருமணம் செய்து லண்டனுக்கு சென்றதாக கூறப்படுகின்றது.
மகனும் பொறியியல் படிப்பை முடித்து வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில், தனது சகோதரி மற்றும் பிள்ளைகளுடன் அவர் வசித்து வந்ததாக கூறப்படுகின்றது.
வன்னியில் இடம்பெயர்ந்து தங்கியிருந்த போது கிளிநொச்சி நகர்ப் பகுதியில் 15 பரப்பு காணியை வாங்கி தற்காலிகமாக வீடு அமைத்து தங்கியிருந்ததாகத் தெரியவருகின்றது.
அத்துடன் யாழில் ஏ9 வீதியோரமாக உள்ள கோடிக்கணக்கான மதிப்புள்ள 8 பரப்பு காணியுடன் கூடிய வீடும் தாயின் பெயரிலேயே இருந்துள்ளது.
2021ம் ஆண்டு பொறியியலாளரான மகனுக்கு யாழ்ப்பாணத்தில் திருமணம் நடந்தபோது திருமணத்திற்கு அழையா விருந்தாளியாக லண்டனிலிருந்து தனது பிள்ளைகள் இருவருடன் மகள் வந்துள்ளார்.
பொலிஸில் முறையிட மறுக்கும் தாயார்
திருமணம் முடிந்து அடுத்தநாளே மகள், தனக்கு யாழ்ப்பாணத்தில் தாயின் வீடு மற்றும் கிளிநொச்சி காணிகளை எழுதித் தருமாறு கோரியுள்ளார். ஆனால் தாய் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், தற்போது யாருக்கும் காணி எழுதிக் கொடுக்க மாட்டேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சகல சொத்துக்களையும் மகனின் பெயரிலேயே தாய் எழுதி வைத்துள்ளார். இதனை கேள்விப்பட்ட மகள் கடந்த சில நாட்களுக்கு முன் லண்டனிலிருந்து வந்து தாயுடன் கடும் சண்டையிட்டதாகத் தெரியவருகின்றது.
அதன்போது வாக்குவாதத்தின் போது ஹெல்மட்டால் தாயை தாக்கியதை அடுத்து கணவனின் சகோதரியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டதாகத் தெரியவருகின்றது.
இதன் பின்னர் தாயை உறவுகள் மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக தாய் பொலிசாரிடம் முறையிட மறுத்து வருவதாகத் தெரியவருகின்றது.
இந்நிலையில் சகோதரியால் தாயார் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து நாடு திரும்பிய மகன் தற்போது பொலிசாரிடம் முறையிட நடவடிக்கை எடுத்து வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.