கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒருநாளுக்கான சுற்றுலாப்பயணிகளின் வருகை சராசரி 5,000லிருந்து 3,782 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
எனினும், இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையானது இம்மாத இறுதிக்குள் 1 இலட்சத்தை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இம்மாதத்தில் இறுதிக்குள் சராசரியாக சுற்றுலாப்பயணிகளின் வகையானது 120,934 தொடக்கம் 131,112 வரை அமையலாம் எனவும் கூறப்படுகிறது.
சுற்றுலா வீசா
இதன்படி இம்மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் 79, 431 பேர் சுற்றுலா வீசா மூலம் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
மேலும் கடந்த ஆண்டு மே மாதத்தின் முதல் 3 வாரங்களில் 83,309 பேர் வருகை தந்துள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தரவுகளின் படி இந்தியாவிலிருந்தே அதிகபட்ச சுற்றுலா பயணிகள்(26சதவீதம்) வருகை தந்துள்ள நிலையில், இரண்டாமிடத்தில் மாலைதீவுகளிலிருந்து 11 சதவீதமானோர் வருகை தந்துள்ளனர்.
மேலும், சர்வதேச தரப்பில் காணப்படும் விசா(Visa) பிரச்சினையும் இம்மாத வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாமெனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.