2006 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து பிரான்ஸ் வந்தடைந்த தமிழ் பேக்கர் தர்ஷன் செல்வராஜா, 2024 ஆம ஆண்டின் ஒலிம்பிக் சுடரை ஏந்திய முதல் ஈழத் தமிழர் என்ற பெருமையை படைத்துள்ளனர்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டது தனது அதிர்ஷ்டம் என பேக்கரி உரிமையாளரும் புலம்பெயர் இலங்கைத் தமிழருமான தர்ஷன் செல்வராஜா தெரிவித்துள்ளார்
2024 ஆண்டுக்கான தொடர் ஓட்டப் போட்டியில் ஒலிம்பிக் தீபத்தை எந்திய 10000 பேரின் ஒருவராக தமிழர் தர்ஷன் செல்வராஜாவும் ஒருவராவார்.
ஆயிரக்கணக்கானவர்களில் தானும் ஒருவனாக தேர்ந்தெடுக்கப்ட்டதையிட்டு பெரு மகிழ்ச்சி அடைவதாக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தர்ஷன் செல்வராஜா தெரிவித்தார்.