இதயத்தை பலமாக்க உதவும் உணவுகள்!

 நம் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்ககூடிய சிவப்பு உணவுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்த்து பயன் பெறலாம்.

சிவப்பு உணவுகள்

உடல் ஆராக்கியத்தில் நாம் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவர்கள் அறிவுறுத்தும் போது சில வண்ணங்களில் உள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் என்கின்றனர்.

அதில் சிவப்பு நிறங்களை கொண்ட காய்கறி பழங்கள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடியதாம்.

நம் எல்லோருக்கும் குடமிளகாய் தெரியும் இது பச்சை, சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை.

குறிப்பாக, சிவப்பு நிற குடைமிளகாய் குறைந்த கலோரிகளும், அதிக நார்ச்சத்தும் கொண்டது. அத்துடன், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் கே மற்றும் லைகோபின் எனும் ஆன்டிஆக்சிடண்ட்ஸ் ஆகியவை இருக்கிறது.

இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடியது. ஆப்பிள்கள் குறைந்த கலோரிகளையும் வைட்டமின்களையும் கொண்டவையாகும்.

இந்த ஆப்பிள்களை சாப்பிடும் போது ரத்த அழுத்தம் சீராகி, இதய ஆரோக்கியம் மேம்படும் .பீட்ரூட் எப்போதும் நம் இதயத்துடிப்பின் ஆரோக்கியத்திற்கு உதவும்.

பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் ரத்த அழுத்தத்தை சீராக்கி, இதய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவி செய்யும்.

ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் அதிகமுள்ள ஸ்டிராபெரியில் வைட்டமின் சி உள்ளிட்ட இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஆற்றல் வாய்ந்த ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன.

மாதுளையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கக்கூடிய இரும்புச்சத்து அதிகம் காணப்படுகிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும். எனவே மாதுளையில் இருக்கும் அனைத்து ஊட்டச்சத்துகளும் இதய நோய்களை தடுக்கக் கூடியவை.