இந்தியாவின் (India) மும்பை நகரில் (Mumbai) பாரிய விளம்பர பலகை கோபுரம் ஒன்று வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் 75 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், விளம்பர பலகையை அமைத்த விளம்பர நிறுவனம், அதனை காட்சிப்படுத்துவதற்கு மும்பை நகராட்சி (Municipal Corporation) அமைப்பிடம் அனுமதிப்பெற்றிருக்கவில்லை என்று மாநகராட்சி தமது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அனுமதியற்ற விளம்பரப்பலகை
சுமார் 100 அடி உயரம் கொண்ட இந்த விளம்பரப்பலகை, 1,338 சதுர மீட்டர் (14,400 சதுர அடி) அளவைக் கொண்டிருந்தது.
இது ஒலிம்பிக் குளத்தின் 1,250 சதுர மீட்டரை விட பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மாநகர சபையினால் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட விளம்பர பலகையின் அளவை விட ஒன்பது மடங்கு அதிகமாக இது இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.