இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முதற்கட்டமாக இலவச அரிசி வழங்கும் திட்டம் கடந்த மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் 34 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் குறித்த திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும்.
10 கிலோகிராம் இலவச அரிசி
இதன்படி மாவட்ட செயலகங்கள் ஊடாக தலா 10 கிலோகிராம் இலவச அரிசி வழங்கப்பட உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, மனித பாவனைக்காக 176,000 கிலோகிராம் அரிசியை மீண்டும் பதப்படுத்தி வெளியிடுவதற்கு தயாராக இருந்த அரிசி ஆலையொன்றை சுற்றிவளைப்பதற்கான நடவடிக்கையை அநுராதபுரம் மாவட்ட நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் நேற்றைய தினம் (12.05.2024) எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.