தைவானில் ஹுலியன் மாகாண கடற்கரையில் இன்று மாலை 3.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கமானது 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கி ஹூலியன் கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த மாத தொடக்கத்தில் தைவான் தலைநகர் தைபேயில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.