இலங்கையில் முதன் முறையாக ரூபவாஹினி கூட்டுத்தாபனம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி, செய்தியை ஒளிபரப்பியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (05) இரவு 8.00 மணி செய்தியின் போது மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியானது, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முக்கியமான மைல் கல்லாக அமைந்துள்ளது.
சிங்கள மொழியில் செயற்கை நுண்ணறிவு
அதன்படி பிரபல சிங்கள மொழி செய்தி வாசிப்பாளர்களான சமிந்த குணரத்ன மற்றும் நிஷாதி பண்டாரநாயக்க ஆகியோர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்தி வாசிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருந்தது.
அதேவேளை நாட்டில் சிங்கள மொழியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி செய்தி ஒளிபரப்பப்பட்டது இதுவே முதல் முறையாகும்.