மருத்துவ பீட மாணவர்கள் குழுவினால் கொழும்பில் இன்று முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையின் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.
கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவிற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.
‘சுதந்திர சுகாதார பட்டப்படிப்பினை பணத்திற்காக விற்பனை செய்யும் அரசாங்கத்தின் சூழ்ச்சியை உடனடியாக நிறுத்துமாறு இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
விஹாரமாதேவி பூங்காவிற்கு அருகில் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்த போது, அதனை தடுத்து நிறுத்தும் வகையில் பொலிஸார் அறிவித்தல் விடுத்தனர்.
எனினும், பொலிஸாரின் அறிவிப்பையும் பொருட்படுத்தாது மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
மாணவ செயற்பாட்டாளர்கள், அங்கிருந்தவர்களுடன் உரையாடியதன் பின்னர் கலைந்து சென்றனர்.