அவுஸ்திரேலியாவில் தொழில் அல்லது கற்கை நடவடிக்கைக்காக செல்வதற்கு எதிர்பார்க்கும் இலங்கையர்களின் கனவை நனவாக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டம் கொழும்பு5 ஹெவ்லொக் சிட்டியில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த வேலைத்திட்டம் இலவசமாக நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு விசா
அவுஸ்திரேலியாவுக்கு சரியான முறையில் செல்வதற்கு வழிக்காட்டுவதே இதன் நோக்கமாகும்.
அவுஸ்திரேலியாவின் பிரதான குடியேற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சட்டதரணிகள் இதில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
மாணவர் விசா, ஸ்பொன்ஸர் விசா உட்பட அனைத்து விசாக்களும் பெற்றுக் கொள்ளும் முறை தொடர்பில் இங்கு சுட்டிக்காட்டப்படும்.
குடியுரிமை பெற வாய்ப்பு
சரியான பல்கலைக்கழம் ஒன்றை தெரிவு செய்தல், குடியுரிமை பெற்றுக் கொள்வதற்கான பாடநெறியை தெரிவு செய்தல், புலமைப்பரிசிலுக்கு அவசியமான தகுதி பெறுதல் ஆகியவை தெளிவுப்படுத்தப்படவுள்ளது.
புலமைப்பரிசிலுக்கு ஈடுபடுத்தல், நிதி தேவைக்காக சரியான ஆலோசனை வழங்குதல் மற்றும் தொழில் விசாவுக்கு அவசியமான அனுசரனைக்கு தொடர்புக் கொள்ள வேண்டிய சரியான வழிமுறை தொடர்பில் இதன் போது தெளிவுப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.