இலங்கையில் மக்கள் புகைபிடிப்பதற்காக நாள் ஒன்றுக்கு 52 கோடி ரூபாவை செலவிடுவதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த தகவலை இலங்கையின் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
மேலும், புகைப்பழக்கம் காரணமாக நாளாந்தம் சுமார் 50 பேர் உயிரிழப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டில் ஆண்டுக்கு 2,300 பில்லியன் புகையிலை வடிகட்டிகள் சுற்றுச்சூழலுக்கு கழிவாக வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.