ஐ.பி.எல் தொடரின் 30ஆவது போட்டி இன்றையதினம் ரோயல் செலஞ்சேர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே இடம்பெற்று வருகின்றது.
பெங்களூரு எம். சின்னசாமி மைதானத்தில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சேர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இழந்து 287 ஓட்டங்களை எடுத்தது.
ஐபிஎல் போட்டிகளில் அணி ஒன்று பெற்றுக்கொண்ட அதிக ஓட்டங்களாக இது பதிவாகி செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத் அணி சார்பில் அதிகபடியாக டிராவிஸ் ஹெட் 102 ஓட்டங்களையும், ஹென்ரிச் கிளாசென் 67 ஓட்டங்களையும் பெற்றுகொண்டனர்.
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 08ஆவது போட்டியின் மும்பை அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 277 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து 288 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சேர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெடுக்களை இழந்து 262 ஓட்டங்களை பெற்றுகொண்டது.
பெங்களூரு அணி சார்பில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 83 ஓட்டங்களையும், ஃபாஃப் டு பிளெசிஸ் 62 ஓட்டங்களையும், விராட் கோலி 42 ஓட்டங்களை பெற்றுகொண்டனர்.
இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளது.