உலகளவில் தீவிரவாத மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் எதிர்பாராத விதமாக நடத்து வருகின்றது. இது விழிப்புணர்வின் அவசியத்தை காட்டுவதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டில் பொது அமைதியின்மையை தூண்டும் வகையில் அரசியல், மத மற்றும் கலாசார அம்சங்களின் மீது தாக்குதல் நடத்த சிலர் முயற்சிப்பதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ரமழான் பண்டிகை மற்றும் சிங்கள, தமிழ் புத்தாண்டின் போது பாதுகாப்பிற்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.
பாதுகாப்பு நிலைமைகள் விரைவாக மாறலாம். ஈஸ்டர் தாக்குதல் அளவில் இல்லாவிட்டாலும், ஏனைய சம்பவங்கள் நிகழலாம்.
தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காண வேண்டும் என அவர் தெரிவித்தார்.