ஆசியர்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு!

இலங்கையில் ஆங்கில மொழிக் கல்வி மூலம் கற்பிக்கும் 2,500 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

‘அனைவருக்கும் ஆங்கிலம்’ திட்டத்தின் கீழ் இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தற்போது ஆங்கில மொழி மூலமாக கலிவி பொதுத் தரதார சாதாரண பாடங்களை கற்பிக்க அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை 4,441 ஆகும்.

இதேவேளை, ஆங்கில மொழி மூலமாக க.பொ.த சாதாரண பாடங்களை கற்பிக்க சுமார் 6,500 ஆசிரியர்கள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டில் ஆங்கில மொழி மூலம் பாடங்களைக் கற்பிக்கும் 765 பாடசாலைகளில் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.