இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி, ஸ்டாலின், திருமாவளவனுக்காக குரல் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி நடித்துள்ள ரோமியோ படத்தின் ப்ரோமேஷன் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு கோவையில் நடைபெற்றது.
அப்போது அவரிடம், நடிகர் விஜய் சினிமாவில் இருந்து வெளியேறியதாக கூறி தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சியை தொடங்கியிருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள் செய்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அவர், “சினிமாவில் 17 வயதில் இருந்த விஜய் நடித்த விஜய் உச்சம் தொட்டு பெரிய அளவில் இருக்கிறார். நமக்காக அன்பு கொடுத்த மக்களுக்கு ஏதோ செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். அது வரவேற்க கூடிய விடயம் தான்” என்றார்.
மேலும், நீங்கள் அரசியலுக்கு வருகிறீர்களா என்று விஜய் ஆண்டனியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் இப்போது சினிமாவில் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறேன். அரசியலை பற்றி யோசிக்க நேரமில்லை.
எதிர்காலத்தில் நிறைய செய்துவிட்டோம், இனி மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற வகையில் வாய்ப்பு கிடைத்தால் வரலாம். இப்போது தெரியவில்லை.
நான் திருமாவளவன், விஜய், ஸ்டாலினுக்காக கொடுக்கிறேன். நீங்களும் அரசியலுக்கு வந்தால் உங்களுக்காகவும் குரல் கொடுக்கிறேன்” என்றார்.