அரசியல் நடவடிக்கைகளை குழப்பிக் கொள்ள வேண்டாம்!

இந்நாட்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்பதனால் சட்டகத்திற்கு அப்பாற்பட்டு முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். இலங்கையில் உள்ள அரச பாடசாலைகளுக்கு எதிர்க்கட்சியினால் ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்குவதும் இத்தகைய சட்ட கட்டமைப்பிற்கு அப்பாற்பட்ட செயற்பாடுகளில் ஒன்றாகும். எதிர்க்கட்சியின் இந்த செயற்பாட்டை பின்பற்றி தற்போது அரசாங்கம் கூட ஸ்மாட் வகுப்பறைகளை வழங்க நடவடிக்கை எடுத்திருப்பது தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பலமானதொரு எதிர்க்கட்சி அரசியல் கட்சியாக,ஐக்கிய மக்கள் சகதி இவ்வாறான சேவைகளை மேற்கொள்ளும் போது, ​​யாரேனும் இத்திட்டங்களைப் பின்பற்றத் தயாராக இருந்தால், குறித்த திட்டத்தை  வெற்றிகரமாகச் மேற்கொள்ள அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு தேவையான ஒத்துழைப்பை நல்கவும் தயார். 

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்துடன் இணைவது இதன் அர்த்தமல்ல. தமது அரசியல் செயல்முறையும் அபிவிருத்தி செயல்முறையும் முற்றிலும் வேறுபட்டது. எனவே இவ்விரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம் என மக்களிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 145 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், புத்தளம், வென்னப்புவ, நயினமடல் புனித மரியாள் கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஏப்ரல் 08 ஆம் திகதி இடம்பெற்றது.
 
இந்நிகழ்வில், ​​கல்லூரியின் நடனம், வாத்தியம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினருக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்குத் தேவையான ஒரு இலட்சம் ரூபா நிதியையும் நன்கொடையாக வழங்கி வைத்தார்.

சஜித் பிரேமதாச எப்போதும் இலவசமாக பகிர்ந்தளிப்பதாக இந்நாட்டில் உள்ள சில முட்டாள்கள் குற்றம் சுமத்துகின்றனர். இவ்வாறு விமர்சனங்களை முன்வைக்கும் தீவிர கம்யூனிஸ்ட், தீவிர சோசலிச புரட்சியாளர்கள், அவர்களின் பிள்ளைகளை  எந்த குறையில்லாமல் தனியார் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கின்றனர்.

2019, 2020 களில் இன்றைய காலகட்டத்தை விட சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம் என அரசியல்வாதிகள் கூறினாலும், இறுதியில் நாடு வங்குரோத்தாகி மக்கள் வாழ்வு அழிந்து புத்தாண்டில் உண்ணும் பருகும் மேசையிலுள்ள உணவுப் பொருட்களின் விலைகள் கூட இரட்டிப்பாகி மக்களின் வாழ்வு முடங்கிப்போயுள்ளது. 

2024 தேர்தல் வருடமாக இருந்தாலும் பொருட்களின் விலை குறையும், பணவீக்கம் குறையும் என எதிர்பார்த்தாலும்,அவ்வாறான ஒன்றை மேற்கொள்ள முடியாத நிலையிலையே அரசாங்கம் உள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கத்தால் முடியாது.

எனவே பொருட்களின் விலைகள் குறையும் எனக் கூறி, மக்களை மீண்டும் ஏமாற்ற வேண்டாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.

உண்மையைக் கூறி 17 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் உறுப்பினர் கலாநிதி சமல் சஞ்சீவ மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். 

முன்னாள் சுகாதார அமைச்சர், செயலாளர் தலைமையிலான தரப்பினர் மேற்கொண்ட ஊழல் நடவடிக்கைகளை வெளிக்கொணர்ந்தமையினால் கலாநிதி சமல் சஞ்சீவ இடைநீக்கம் செய்யப்பட்டார். பணி தடை செய்யப்பட்டாலும், சுகாதாரத்துறையில் நடந்த, நடக்கும் ஊழல் மோசடிகள் குறித்து அவர்  தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகிறார். இறுதியாக உண்மை வெளிவந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.