நிதி மோசடியில் சிக்கிய வெளிநாட்டு பெண்ணை காப்பற்றிய இலங்கை வங்கி அதிகாரி!

அவுஸ்திரேலியாவில் (Australia) சமூக ஊடகங்கள் ஊடாக சந்தித்த நபர் ஒருவரால் நிதி மோசடியில் சிக்கிய மெல்பேர்னில் வசிக்கும் பெண் ஒருவரை இலங்கை வங்கி அதிகாரி ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

குறித்த பெண் தனது காதலன் என்று கூறிக்கொண்ட வெளிநாட்டவருக்கு பணம் அனுப்புவதற்காக அவுஸ்திரேலிய தேசிய வங்கியின் (NAB) மெல்பேர்ன் கிளைக்கு சென்றுள்ளார்.

ஆனால் அந்த வங்கியின் வாடிக்கையாளர் ஆலோசகர் அதிகாரியாக இருந்த இலங்கையைச் சேர்ந்த டிலான் பத்திரனவிடம் இந்த பெண் வழங்கிய தகவல் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், மேலதிக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பண மோசடி

60 வயதான பெண்மணி வங்கிக்கு சென்று பணம் அனுப்ப உதவி தேவை என்று கூறினார். ஆனால் பெறுநரின் குடும்பப்பெயர் தனக்குத் தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில் அதுவொரு மோசடி நபர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.