இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
Sylhet சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் இலங்கை அணிக்கு துடுப்பெடுத்தாட வாய்ப்பளித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 280 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அணி தலைவர் Dhananjaya de Silva மற்றும் Kamindu Mendis ஆகியோர் தலா 102 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக Khaled Ahmed, Nahid Rana தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 188 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
பங்களாதேஷ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக Taijul Islam 47 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக Vishwa Fernando 4 விக்கெட்டுகளையும், Kasun Rajitha, Lahiru Kumara தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன்படி தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 418 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக Kamindu Mendis 164 ஓட்டங்களையும், அணியின் தலைவர் Dhananjaya de Silva 108 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் Mehidy Hasan Miraz 04 விக்கெட்டுக்களையும், Nahid Rana மற்றும் Taijul Islam தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இந்நிலையில் 510 ஓட்டங்களை பெறும் முனைப்பில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இதன் அடிப்படையில் இலங்கை அணி 328 ஓட்டங்களால் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.
பங்களாதேஷ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக Mominul Haque ஆட்டமிழக்கமால் 87 ஓட்டங்களை பெற்று இருத்தார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக Kasun Rajitha 5 விக்கெட்டுக்களையும், Vishwa Fernando 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.