கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக அடக்குமுறைககளை கண்டித்தும் தொடரும் நிருவாக பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்குடனும் அனைத்து சிவில் சமூகம் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் ஆரம்பமான குறித்த போராட்டம் பல்வேறு கேள்விகளை முன்னிறுத்திய வகையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. திட்டமிடப்பட்டு கல்முனை வடக்கு பிரதேய செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது என ஆர்ப்பாட்டதாரர்கள் தெரிவித்த நிலையில் அரசாங்கம் இனியும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை வழச்கும் வரை எமது அமைதிப்போராட்டம் தொடரும் எனவும்,
தொடர்ச்சியாக இப்போராட்டம் தீர்வு கிடைக்கும் வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதுடன் குறித்த போராட்டம் இடம்பெற்று வரும் பகுதியில் கல்முனை தலைமையக பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.