பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை வரும் 31 ஆம் திகதி வரை நீட்டிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தைக்கு போதுமானளளவு வெங்காய இருப்பை உறுதி செய்யவும் வெங்காய ஏற்றுமதிக்கான தடையை மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
டிசம்பர் 8 ஆம் திகதி இந்திய அரசு பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதித்த நிலையில், சிறப்பு அனுமதியின் அடிப்படையில் நட்பு நாடுகளுக்கு பெரிய வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அனுமதித்தது.
சந்தைகளில் வெங்காயத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பு
இதற்கயைம, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பங்களாதேஷுக்கு இந்தியா 64,400 மெட்ரிக் தொன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்திருந்தது.
இந்நிலையில், பெரிய வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளமை சில நாடுகளின் சந்தைகளில் வெங்காயத்தின் விலையை அதிகரிக்க வழிவகுக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.