பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் பகுதியில் வாழும் பல தமிழ்க் குடும்பங்கள் கஸ்டப்பட்டு சேர்த்த காசை 45 வயதான தமிழ் குடும்பப் பெண் சுருட்டிக் கொண்டு தலைமறைவாகியுள்ளதாக தெரியவருகின்றது.
கிட்டத்தட்ட இலங்கைப் பணத்தில் 20 கோடி ரூபா பெறுமதியான யூரோக்கள் சுருட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிகியாகியுள்ளன.
சந்தேகநபரான பெண் , வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் சொத்துக்கள் வாங்கி குவித்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நாட்டில் இருந்து வெளியேறி பிரான்ஸ் சென்று , பனியிலும் வெய்யிலிலும் இரவு பகல் பாராது உழைத்த பணத்தை இவ்வாறு மோசடியாளர்களிடம் கொடுக்காது, தகுந்த முறையில் எம்மவர்கள் சேமிக்க பழக்க வேணும் என்பதே பலரின் அங்கலாய்ப்பாக உள்ளது.