2024ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்சியான நாடுகள் பட்டியலில் கனடா 15ஆவது இடத்துக்கு இறங்கியுள்ளது.
சமீபத்தில், உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டநிலையில், உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து ஏழாவது முறையாக முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. அமெரிக்கா 15ஆவது இடத்திலிருந்து 23ஆவது இடத்துக்கு சறுக்கியுள்ளது, பிரித்தானியா 20ஆவது இடத்தில் உள்ளது.
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில், கனடா 13ஆவது இடத்திலிருந்த நிலையில், தற்போது அது கோஸ்டா ரிக்கா, குவைத் மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளைத் தாண்டி, 15ஆவது இடத்துக்கு இறங்கியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, 30 வயதுக்குக் கீழுள்ளவர்கள், 10 அல்லது 12 ஆண்டுகளுக்கு முன்னிருந்ததைவிட மகிழ்ச்சி குறைந்தவர்களாக ஆகியுள்ளார்கள் என்று கூறும் உலக மகிழ்ச்சி அறிக்கை ஆசிரியர்களில் ஒருவரான கனேடிய பொருளாதாரவியல் நிபுணர் John Helliwell, அதனால்தான் கனடாவும் அமெரிக்காவும் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் கீழிறங்கிவிட்டன என்கிறார்.
அதே நேரத்தில், 60 வயதுக்கு மேலுள்ளவர்களின் மன நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்கிறார் John Helliwell.