சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் 3 கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த 3 கலந்துரையாடல்களும் இன்று(20) கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தலைமையில் இந்த கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.
இந்த கலத்துரையாடலில் முதலாவது கலந்துரையாடல் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடனும் இடம்பெறவுள்ளது.
3 கலந்துரையாடல்கள்
இரண்டாவது கலந்துரையாடல் பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் இடம்பெறவுள்ளது.
மூன்றாவது கலந்துரையாடல் தொழில்முறை சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெறவுள்ளது.
இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் எதிர்வரும் தேர்தலில் கட்சி எவ்வாறு போட்டியிட வேண்டும் ? கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்ற விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள் மற்றும் பசில் ராஜபக்ச இடையில் அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.