ஹமாஸ் அமைப்பின் 3 ஆவது உயர் தலைவரான மர்வான் இஸா, இஸ்ரேலின் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மர்வான் இஸா கடந்தவாரம் இஸ்ரேலின் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளார் என வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மர்வான் இஸா ஹமாஸின் இராணுவப் பிரிவான இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் படையணியின் பிரதித் தலைவராக விளங்கியவர்.
இஸாவை இலக்குவைத்து தாக்குதல்
மார்ச் 9, 10 ஆம் திகதிகளில் இஸாவை இலக்குவைத்து காஸாவில் தாக்குதல் நட்ததப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் ரியர் அட்மிரல் டேனியர் ஹகாரி கடந்த 11 ஆம் திகதி கூறியிருந்தார்.
எனினும், அந்நடவடிக்கையில் இஸா கொல்லப்பட்டாரா என்பது தெளிவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்தவாரம் இஸ்ரேலின் தாக்குதலில் இஸா கொல்லப்பட்டுள்ளார் என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக் சுலீவன் நேற்று தெரிவித்துள்ளார்.