முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றதாகவும், அங்கு ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய அபிவிருத்திப் பணிகள் உள்ளிட்ட அரசாங்கத்தின் பணிகளை விரைவில் முடித்து ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி அமைச்சரவையில் அறிவித்துள்ளார்.
மூன்று மொழிகள் பேசக்கூடிய ஜனாதிபதி
இதேவேளை, தமிழ் உட்பட மூன்று மொழிகள் பேசக்கூடிய ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசியலமைப்பு அனுமதியளிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.