தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக அருண் தம்பிமுத்து தெரிவுசெய்யப்பட்டுள்ளார் .
தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய நிர்வாகிகள் தெரிவு இன்று (17) வவுனியாவில் இடம்பெற்றது.
இதில் தலைவராக அருண் தம்பிமுத்து தெரிவு செய்யப்பட்டதுடன், கட்சியின் செயலாளராக ஆனந்த சங்கரி தெரிவுசெய்யப்பட்டார்.
மேலும் இதன்போது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி திருகோணமலையில் நடத்தப்படவுள்ள கட்சியின் மாநாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.