காலி யக்கலமுல்ல பிரதேசத்தில் பொல்வத்த ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.
11 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இரு சிறுவர்களும் உறவினர்கள் என்பதுடன், அவர்கள் தமது பெற்றோர்களுடன் ஆற்றில் நீராட வந்த போது இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.
நீரில் மூழ்கி மீட்கப்பட்ட சிறுவர்கள், இமதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கலமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.