தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி இணைந்து ரோமியோ என்ற புதிய படத்தில் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படம் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் அதீத வரவேற்பை பெற்று யூடியூப்பில் 90 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ள சிங்கள பாடல் ஒன்று விஜய் ஆண்டனின் ரோமியோ படத்தில் தமிழில் இடம்பெற்றுள்ளது.
உலகப் புகழ்பெற்ற திங்க் மியூசிக், இந்தியாவுடன் இணைந்து ரவி ரோய்ஸ்டரின் இந்தப் பாடலை தமிழில் ‘வெத்தல’ என்ற பெயரில் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
பிரபல நடிகர் விஜய் ஆண்டனி பாடல் வரிகளை எழுதிய நிலையில், தமிழில் பாடும் வாய்ப்பை இலங்கை பாடகர் ரவி ரோய்ஸ்டரே பெற்றுள்ளமை இதன் சிறப்பாகும்.
யூடியூப்பில் வெளியான 2 நாட்களிலேயே வெத்தல பாடல் 2 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது.
இந்த பாடலின் மூலம் இலங்கை பாடகரான ரவி ரோய்ஸ்டர் தென்னியந்திய திரைபடத்தில் தடம்பதித்துள்ளார்.
மேலும் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி நடித்துள்ள ரோமியோ படத்தை ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.