நாட்டில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக பிள்ளைகள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகலாம் எனவும் , எனவே பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் அதீத கவனம் எடுக்க வேண்டுமெனவும் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நிலைமை அதிகரித்தால் அது வெப்ப அதிர்ச்சி, வெப்ப பக்கவாதம் அல்லது துரதிர்ஷ்டவசமாக மரணத்துக்கு வழிவகுக்கும் என்று சன்ன டி சில்வா சுட்டிக்காட்டினார்.
வெப்பம் அதிகரிப்பதால் சோர்வு அதிகரிக்கலாம்
எனவே, பிள்ளைகளை வெளிநடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதாயின் காலை 11.00 மணிக்கு முன்னதாகவே அவர்களது நடவடிக்கையை முடிக்க வேண்டும்.
பாடசாலைகளில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. அதனால், பிள்ளைகள் அதிகமாக வெளியில் உள்ளனர். இவ்வாறான நிலையில் சுற்றுச்சூழலின் வெப்பம் அதிகரிப்பதால் அவர்களுக்கு சோர்வு அதிகரிக்கலாம் என்றும் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்தார்.