தமிழக பெண்ணின் காலை இந்திய பிரதமர் நரேந்திரமோடி வணங்கை காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில், பிரதமிரின் இந்த செயல் அதிரிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய படைப்பாளிகள் விருது’ வழங்கும் விழாவில் பிரதமர் மோடி, விருது பெற வந்த தமிழகத்தை சேர்ந்த கீர்த்திகா கோவிந்தசாமி என்ற பெண்ணின் காலைத் தொட்டு வணங்கினார்.
வைரலாகும் காணொளி
சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இளம் படைப்பாளிகளை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு அறிவித்த ‘தேசிய படைப்பாளிகள் விருது’களை வெற்றியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 8) வழங்கினார்.
நாட்டின் வலிமை மற்றும் கலாசாரத்தை சர்வதேச அளவில் பரப்ப உதவியவர்கள், பசுமை சாம்பியன்கள், தூய்மை தூதர்கள், வேளாண் படைப்பாளிகள் மற்றும் தொழில்நுட்ப படைப்பாளிகள் என சுமார் 20 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது.
அப்போது தமிழகத்தை சேர்ந்த கீர்த்திகா கோவிந்தசாமி என்பவருக்கு பிரதமர் மோடி விருது வழங்கினார். விருது பெற மேடைக்கு வந்த கீர்த்திகா கோவிந்தசாமி மரியாதையின் நிமித்தம் பிரதமர் மோடியின் காலைத் தொட்டு வணங்கினார்.
இந்நிலையில் பதிலுக்கு பிரதமர் மோடியும் திடீரென அப்பெண்ணின் காலை தொட்டு வணங்கினார். இதனை எதிபாராத அதிகாரிகள், பெண்ணின் காலை ப்[இரதமர் வணங்கியது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இந்தநிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழக பெண்னின் காலை தொட்டு வழங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘