இளநரை என்பது முன்பெல்லாம் 40 வயதைத் தாண்டும்போது வந்தது. ஆனால் தற்போது சிறு வயதிலிருந்தே இந்த பிரச்சினை ஏற்படுகின்றது.
இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. நம்முடைய உணவுமுறை, வாழ்வியல் முறை, சுற்றுச்சூழல் மாசுபாடு, பரம்பரை மற்றும் பயன்படுத்தும் பொருள்களில் உள்ள அதிகப்படியான இரசாயனங்கள் என்பவற்றினால் இளநரை ஏற்படுகின்றது.
இளநரை பிரச்சினை இருப்பவர்கள் வெள்ளை முடியை மறைக்க இரசானங்களை பயன்படுத்துகிறார்கள்.
இளநரை
அது மிக மிக ஆபத்தானது, தலைமுடியை மட்டுமல்லாது உடல் ஆரோக்கியத்திலும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
இதனால், சருமப் புற்றுநோய் முதல் பல்வேறு வகை புற்றுநோய் வருவதற்கான ஆபத்துகள் உண்டாகின்றன.
எனவே, இயற்கையான முறையில் எவ்வாறு முடியை கருப்பாக்கலாம் என்று பார்க்கலாம்.
அதற்கான தீர்வு
கடுகு எண்ணையோடு வெந்தயப் பொடி சேர்த்து கலந்து மிதமான தீயில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
வெந்தயத்தின் சாறு முழுமையாக எண்ணெயில் இறங்கும்வரை சூடானதும் ஆறவைத்து நன்கு ஆறிய பிறகு வடிகட்டி ஒரு போத்தலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும்.
இந்த எண்ணெயை தினமும் தலைக்குத் தேய்த்து வர, முடி நன்கு கருமையாகவும் நீளமாகவும் வளருவதோடு இளநரையும் மறையும்.