நாட்டில் தெரிவுசெய்யப்பட்ட 86 கிராமங்களில் 45,000 இளநீர் கன்றுகளை நாட்டுவதற்கான விசேட வேலைதிட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இளநீர் செய்கையை விரிவுபடுத்தும் நோக்கில் தெங்கு செய்கை சபை இந்த நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளது.
தெரிவுசெய்யப்பட்ட கிராமங்கள்
இதன்படி மொனராகலையில் 03 கிராமங்கள், மாத்தறையில் 01 கிராமம், குருநாகலில் 08 கிராமங்கள், குளியாப்பிட்டியவில் 09, கேகாலையில் 08, கம்பஹாவில் 09, களுத்துறையில் 10, மாரவில 09, இரத்தினபுரி 04, ஹம்பாந்தோட்டையில் 08, அனுராதபுரம், அனுராதபுரம் 02, இந்திராதபுரம், பொலன்னறுவையில் 02, அம்பாறையில் 02, மாத்தளையில் 04, காலியில் 08, மட்டக்களப்பில் 02, யாழ்ப்பாணத்தில் 03, கண்டியில் 04 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
ஆலோசனைகள்
நாட்டில் இளநீர் செய்கைக்கு ஏற்ற 86 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் உற்பத்திக்கான காரணங்களை ஆராய்ந்து மேற்படி கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய இளநீர் நாற்றுகள், தொழில்நுட்ப அறிவு மற்றும் ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படும்.
மேலும் ஒரு கிராமத்தில் அதிக ஏக்கர் பரப்பளவில் இளநீரை யாராவது பயிரிட விரும்பினால், அதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.