ஜேர்மன் நாட்டவர் ஒருவர், 217 முறை கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்டதைக் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
217 முறை கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்ட நபர்
ஜேர்மன் நாட்டவர் ஒருவர், 217 முறை கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்ட நிலையிலும், அவருக்கு பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நபர், தன் விருப்பத்தின்படி 217 முறை கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளார். இந்த விடயம் குறித்து செய்தித்தாள்களில் வெளியான செய்திகள் மூலம் அறிந்துகொண்ட மருத்துவர்கள், அவரை அழைத்து அவரை பரிசோதனைகளுக்குட்படுத்தியுள்ளனர்.
PA MEDIA
கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்படத் துவங்கி சிறிது காலத்துக்குள்ளாகவே, குறிப்பிட்ட சில நிறுவனங்களின் தடுப்பூசியைப் பெற்ற பலர் பல்வேறு பக்க விளைவுகளுக்காளானது தொடர்பான செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.
ஆனால், இந்த நபர் 217 முறை கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்ட நிலையிலும், அவருக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்பது மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இன்னொரு விடயம் என்னவென்றால், அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனைகளில், ஒரு முறைகூட அவருக்கு கோவிட் தொற்று உருவாகவில்லை என்பதும் தெரியவந்துள்ளது என்பதுதான்.