113 ஆவது சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினரால் நடை பவணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (06) மட்டக்களப்பு மணிக்கூட்டு கோபுரத்தடியில் இருந்து கல்லடி பாலம் வரை பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தாங்கிய பதாகைகளுடன் இந்தப் பேரணி இடம்பெற்றுள்ளது.
இதன் போது இலங்கை அரசாங்கம் தனது வெளிநாட்டு கடன்களை மீளச் செலுத்த முடியாது என்று அறிவித்து நாட்டின் அந்நிய செலவாணி மட்டும் மிகவும் குறைந்த நிலையை அடைந்திருந்ததால் அத்தியாவசிய இறக்குமதிகளான எரிபொருள் மற்றும் பால் மா போன்றவற்றிற்கு அரசாங்கம் தடை விதித்தது.
விலை அதிகரிப்பு
இதனால் உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டதும், பொருட்களின் விலைகளில் அதிகரிப்பும் ஏற்பட்டதும் இந்தப் பேரணியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், இதன் காரணமாக மக்களின் வாழ்வாதாரமும், வருமானங்களும் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நூற்றுக்கணக்கான பெண்கள் இந்த நடை பவனியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.