இலங்கை சனத்தொகையில் சுமார் 5 வீதமானோர் க்ளூகோமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் ஒரு குறிப்பிட்ட அதிகரிப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
உலகளவில் மாத்திரமின்றி இலங்கையில் குருட்டுத்தன்மைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று க்ளூகோமா ஆகும்.
உலகில் எத்தனை சதவீதம் என்று சொன்னால் அது 3.54%. ஆனால் இலங்கையில் கிட்டத்தட்ட 5% ஆனோர் உள்ளனர்.
இதற்கு ஒரு காரணம் முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு. எனவே, நம் நாட்டில் கிட்டத்தட்ட 5% இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, கண் பரிசோதனையை மேற்கொள்வது மிகவும் முக்கியம் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.