இலங்கையில் உள்ள அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கையை எதிர்ப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கட்சி அலுவலகத்தில் தொழிற்சங்க உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், தாம் தனியார்மயப்படுத்தலை மாத்திரம் எதிர்ப்பதாகவும், இலங்கைக்கான முதலீடுகளை எதிர்ப்பதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இலங்கையிலுள்ள அரச நிறுவனங்களை நேர்மையற்ற வழிகளில் தனியார்மயப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நாம் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் எனவும் கட்சியின் 144 உறுப்பினர்கள் மக்கள் ஆணையுடன் நாடாளுமன்றுக்குள் வந்ததோம். எனவே மக்களுக்காக நாம் சரிவர செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எமது நிலைப்பாட்டை நாம் தெளிவாக கூற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.