தொழிலாளர் வேலைநிறுத்தம் காரணமாக ஆறு நாட்கள் மூடப்பட்டிருந்த , பிரான்சின் தலைநகர் பாரிஸில் உள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த திங்கட்கிழமை ஈபிள் கோபுரத்தை அண்மித்த பகுதியில் பணிபுரிந்த ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
கோபுரத்தை பார்வையிட முடியாமல்
இதன் காரணமாக கோபுரத்தை பார்வையிட முடியாமல் போனதாகவும், 06 நாட்களுக்குப் பின்னர் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக 03 மாதங்களுக்குள் ஈபிள் கோபுரம் பார்வையாளர்களுக்காக மூடப்படுவது இது இரண்டாவது தடவையாகும்.