நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களு ஆராச்சி, மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் வெப்பநிலை மற்றும் வறட்சி நிலை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் , நாட்டு மக்களிடையே நீர் நுகர்வு அதிகளவில் இடம்பெற்று வருகிறது.
நீர் பயன்பாடு
எனினும் தற்போதைய நிலைமை காரணமாக மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கோரியுள்ளார்.
இதேவேளை கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான முக்கியமான நீர் ஆதாரமான களனி ஆற்றின் நீர் மட்டம் குறைந்து வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.