யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரம் ஒன்று இன்று வியாழக்கிழமை (22) காலை கரையொதுங்கியுள்ளது.
மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதனை அவதானித்து அது தொடர்பில் உடனடியாக வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு அறிவித்தனர்.
இரும்பினாலான குறித்த மிதக்கும் கூடாரம்
இரும்பாலான குறித்த மிதக்கும் கூடாரத்தை கட்டைக்காடு மீனவர்கள் தங்களது முயற்சியால் கரைக்கு கொண்டுவருவம் மீனவர்களின் முயற்சி தோல்வியுற்றதால் கூடாரத்தை அகற்றும் முயற்சியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் ஈடுபட்டு அதனை அப்புறப்படுத்தினர்.
அதேவேளை அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய இவ்வாறான கூடாரங்களில் தாய்லாந்து கொடி காணப்பட்டது.
அதேசமயம் இன்று கரையொதுங்கிய இந்த கூடாரத்தில் எந்தவிதமான கொடியும் , காணப்படவில்லை என கூறப்படுகின்றது.