நாட்டின் பணவீக்க வீதத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (20.2.2024) உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
அன்னிய கையிருப்பு
2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பணவீக்க வீதத்தை 5% ஆகக் கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
70% முதல் 6% வரை அதிகரித்துள்ள பணவீக்க வீதத்தை இன்று குறைக்க அரசாங்கத்தினால் முடிந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டு மில்லியன் டாலராக குறைந்திருந்த அன்னிய கையிருப்பு தற்போது 4.7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என்றும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.