புரதமும் கொழுப்பும் அதிகமாக கொண்ட புதிய வகை மாமிச அரிசியை தென் கொரியாவின் (Yonsei) யோன்செய் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுப்பிடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த புதிய வகை கலப்பின (hybrid food) மாமிச அரிசியானது சாதாரண அரிசியை விட 8 சதவீதம் அதிக புரதமும், 7 சதவீதம் அதிக கொழுப்பும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய வகை மாமிச அரிசி
புதிய வகை மாமிச அரிசியை தயாரித்த விஞ்ஞானிகள் முதலில் மீனில் இருந்து எடுக்கப்படும் பசை போன்ற பொருளை அரிசியில் பூசுகின்றனர்.
இதனால் இறைச்சித் துகள்கள் அதில் ஒட்டிக்கொள்கின்றன, பின்னர் அவை 11 நாட்களுக்கு ஒரு பாத்திரத்தில் பதப்படுத்தப்படுகின்றது.
சர்வதேச ஊடகங்களின் தகவலின் படி, இவை சாதாரண விலை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்றும் இந்த மாமிச அரிசி வறட்சி, இராணுவ உணவு மற்றும் விண்வெளி உணவாக பயன்படுத்தப்படலாம் என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
ஆய்வகங்களில் வளர்க்கப்படும் இந்த அரிசி, கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதோடு, இறைச்சிக்காக கால்நடைகளை வளர்க்கும் தேவையை நீக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.