முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் நோய் உள்ளதென அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
நேற்று நீதிமன்றில் தகவல் வெளியிடும் போது அவர் இந்த உண்மைகளை தெளிவுபடுத்தியுள்ளார்.
இவ்வாறான நிலையில் அவருக்கு செயற்கை ஒக்ஸிஜன் வழங்கப்பட வேண்டும் என சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்
கெஹலிய ரம்புக்வெல்ல
தற்போது சிறைச்சாலையில் இந்த நோய்க்கு வழங்கப்படும் சிகிச்சை இல்லை என அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் சந்தேகநபர்கள் 6 பேரும் எதிர்வரும் பெப்ரவரி 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.