ஹைதராபாத்தில் மெட்ரோ நிலையத்தில் உள்ள கடையொன்றில் ரொபின் ஜேக்குயூஸ் என்ற நபர் சாக்லேட் வாங்கியிருக்கிறார்.
அதை சாப்பிடும் போதுதான் சாக்லேட்டில் புழுக்கள் நெளிவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
சாக்லேட்டில் புழு இருப்பதை அவதானித்த நபர், அமீர்பெட் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள ரத்னாதீப் கடையில் தான் வாங்கியதற்கான பில்லையும் உடனடியாக காணொளியாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுபோன்ற சுகாதாரப் பிரச்னைகளுக்கு யார் பொறுப்பு? பொருட்களுக்கு தரப் பரிசோதனை எல்லாம் செய்ய மாட்டார்களா என கோபமாக கேட்டு X ல் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவின் கீழ் பல பதிவர்கள் தங்கள் கவலைகளை தெரிவித்து வருகின்றனர்.
இது போல மோசமான பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இச் சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.