யாழ்ப்பாணம் – சுன்னாகம் பிரதேசத்தில் பயிரிடப்பட்டிருந்த கரட், பச்சை மிளகாய் மற்றும் உருளைகிழங்கு என்பன தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் உயர்வடைந்திருந்த மரக்கறிகளின் விலைகள் தற்போது பாரியளவில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறைவடைந்துள்ள மரக்கறி விலை
அந்தவகையில், மரக்கறி வகைகளின் விலை 65% முதல் 70% வரை குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் அறுவடை செய்யப்பட்ட மரக்கறிகள் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, உயர்வடைந்து வந்த மரக்கறி வகைகளின் விலைகள் குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக 2 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்பட்டிருந்த கரட், இன்று காலை ஒரு கிலோ 500 ரூபா தொடக்கம் 600 ரூபாவாக குறைந்துள்ளது.
நாட்டில் மரக்கறிகள் சீரற்ற காலநிலை காரணமாக அழிவடைந்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டு அதிக விலைகளுக்கு விற்பனை செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.