ஜப்பானில் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்திருப்பது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ககோஷிமாவின் மினாமிசாட்சுமா நகரில் உள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தெற்கு ஜப்பானில் 14 ஆயிரம் பறவைகள் அழிக்கப்பட்டுள்ளது.
நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்க, பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து 3 கி.மீ முதல் 10 கி.மீ வரையுள்ள 15 பண்ணைகளில் வளர்க்கப்படும் சுமார் 3,63,000 கோழிகள் மற்ற இடங்களுக்கு கொண்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அழிக்கப்பட்ட பறவைகளை அடக்கம் செய்வதும், கோழிப்பண்ணைகளைச் சுத்தம் செய்யும் பணிகளும் அடுத்த சில நாள்களுக்குள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் பறவைக் காய்ச்சல் சீசன் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் தொடங்கும்.
கடந்த பருவத்தில், ஜப்பானில் 47 மாகாணங்களில் சுமார் 26 பண்ணைகளில் நோய்க்கிருமி தொற்று ஏற்பட்டு 17.71 மில்லியன் பறவைகள் அழிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.