நாட்டில் 40,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவும் இவ்வேளையில், பெருமளவிலான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பெரும் தியாகங்களைச் செய்து, கொரோனா காலத்தில் கூட பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த பட்டதாரிகளுக்கு முறையான ஒழுங்கு முறையிலும் வேலைத்திட்டத்திலும் ஆசிரியர் சேவையில் இணைவதற்கான வாய்ப்பை வழங்குங்கள்.
இதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறைக்கு கூட தீர்வு காணப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (09) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் தானும், ரோஹினி கவிரத்ன பாராளுமன்ற உறுப்பினரும் கல்வி அமைச்சரிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்துள்ளோம். என்றாலும் இன்னும் இதற்கு தீர்வு காணப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.