நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கத்தக்க மின் நிலைய திட்டங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்தப்படா விட்டால், இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வங்குரோத்து நிலைமைகளுக்கான காரணங்களை ஆராய்ந்து நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்பிப்பதற்காக மின்சார சபையின் அதிகாரிகள் நாடாளுமன்ற விசேட குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மின் உற்பத்தி நிலையங்கள்
அங்கு உரையாற்றிய மின்சார சபையின் பொது முகாமையாளர் நரேந்திர சில்வா, அரசாங்கங்கள் எடுக்கும் சில முடிவுகள் மற்றும் மின் உற்பத்தித் திட்டங்களுக்கமைய மின் உற்பத்தி நிலையங்கள் இயங்காததன் விளைவுகளை மக்கள் தற்போது அனுபவிக்க வேண்டியுள்ளது.
செயலிலுள்ள ஆற்றலின் சிறப்பு பயன்பாடுகள் ஊடாக எதிர்கால உற்பத்தித் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.