பற்களின் ஆரோக்கியத்திற்கு வேப்பிலை

வேப்பிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

இதன் இலைகளிலுள்ள சாற்றில் ஆன்டிசெப்டிக் பண்புகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளிட்ட பல பண்புகள் இருக்கின்றன.

பல ஆண்டுகளாக உடல் நல பிரச்சினைகளுக்கு மருந்தாக வேப்பிலை பயன்பட்டு வருகின்றது.

வேப்பிலை சுவைப்பதற்கு கசப்பாக இருந்தாலும் சிலர் சமையலுக்காவும் பயன்படுத்துகின்றனர். உடல்நலத்தை தாண்டி சரும பாதுகாப்பிற்கு உதவி செய்வதாக கூறப்படுகின்றது.

மாறாக இதில் எவ்வளவு நன்மைகள் கிடைத்தாலும் அளவாக பயன்படுத்துவது அவசியம்.

அந்த வகையில் வேப்பிலை பயன்பாட்டினால் எமக்கு கிடைக்கும் நன்மைகளை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

வேப்பிலை

எம்மை பாதிக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக செயற்படும் ஆற்றல் வேப்பிலைக்கு அதிகமாகவே இருக்கின்றது. இதன் இயற்கை சேர்மங்கள் தொற்றுக்களை தடுக்க உதவியாக இருக்கின்றன.

2. உடலின் பல பகுதிகளில் அழற்சியை ஏற்படுத்தி எம்மை அசௌகரிய நிலைக்கு கொண்டுச் செல்லும் காரணிகளை வேப்பிலை தடுக்கின்றது.

3. சரும பிரச்சினைகளான முகப்பரு மற்றும் எக்சிமா உள்ளிட்டவைகளுக்கு வேப்பிலை சிறந்த மருந்தாகும். இதனையே இந்தியா போன்ற நாடுகளில் வாழும் மக்கள் சருமம் காப்பானாக பயன்படுத்தி வருகின்றனர்.

4. சருமத்தை தொடர்ந்து பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கின்றது. பற்களில் ஏற்படும் பற்சொத்தை, ஈறுகளில் பிரச்சினை இப்படியானவற்றை ஓட விடும் பண்பு வேப்பிலைக்கு இருக்கின்றது.

5. ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள் அதிகம் உள்ள இலைகளில் வேப்பிலையும் ஒன்று. இதனை மென்று சாப்பிட்டு வந்தால் நம் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி தன்னாலேயே அதிகரித்து விடும். அன்று முதல் நோய் வருவதும் குறைவாக இருக்கும்.

6. வேப்பிலைக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றன. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாரளமாக வேப்பிலை பயன்படுத்தலாம். எப்படி பார்த்தாலும் நமக்கு உதவியாக இருக்கும்.

7. இரைப்பை குடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு வேப்பிலை தீர்வாக இருக்கின்றன. செரிமானத்தை சீர்ப்படுத்தி நம்முடைய வயிற்றை கிருமிகளிடமிருந்து பாதுகாக்கின்றது.

8. காயங்கள் பட்டவுடன் மருந்துகளை தேடாமல் வேப்பிலையை பேஸ்ட்டாக்கி அதில் போட்டால் தீர்வை பெற்றுக் கொள்ளலாம்.