உலகம் முழுவதும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
2022ஆம் ஆண்டில் 185 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
உயிரிழப்புகள்
குறிப்பாக, கண்டறியப்பட்ட புற்றுநோயாளர்களிடையே மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் தொடர்பான புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த ஆண்டில் புதிதாக 20 மில்லியன் புற்றுநோயாளர்களும், 9.7 மில்லியன் உயிரிழப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.